வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வரும் 21ம் தேதி ஓட்டுப்பதிவு
வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வரும் 21ம் தேதி ஓட்டுப்பதிவு
ADDED : நவ 28, 2026 10:54 PM

புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு விநியோகம் நேற்று (நவ.,27) 27ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 2ம் தேதி மாலை 4 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 3ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 4ம் தேதி பிற்பகல் 2:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் 5ம் தேதி வெளியிடப்படும். தேர்தல் ஓட்டுப்பதிவு 21ம் தேதி காலை 7:15 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அன்று மாலை 6:30 மணிக்கு துவங்கி, முடிவுகள் 21ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் அறிவிக்கப்படும்.
வேட்பு மனுக்களை பார் அசோசியேஷன் தேர்தல் அலுவலகத்தில் பெற்று, அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை தேர்தலில் தலைவர் பதவிக்கு முகுந்தன், பொதுச் செயலாளர் பதவிக்கு மணிவண்ணன், சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். இத்தகவலை தேர்தல் அதிகாரி உதய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
