/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் சொற்பொழிவு
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் சொற்பொழிவு
ADDED : ஆக 02, 2025 06:48 AM

புதுச்சேரி : ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் சொற்பொழிவு மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய மாணவர் சங்கம் துவங்க விழா நடந்தது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் மஞ்சுபாலா தலைமை தாங்கினார். கல்லுாரியின் தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், அறங்காவலர் சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், டீன் அகாடெமிக்ஸ் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை, காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் மூத்த சிஸ்டம்ஸ் பொறியாளர் தினேஷ்குமார் பங்கேற்று, வங்கித்துறையில் ஆரக்கிளின் பங்கு, நேரடி பரிவர்த்தனை செயலாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை, வங்கிகளில் தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பரவல் குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு ஆறிவியல் துறை பேராசிரியர்கள் அருணாகுமாரி, திவ்யா ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.