தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் சொற்பொழிவு

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் சொற்பொழிவு

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் சொற்பொழிவு


ADDED : செப் 04, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பூபதி அறக்கட்டளைச் சொற்பொழிவு நடந்தது. 

முனைவர் நெய்தல் நாடன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார். நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டி பேசினார். 

மயிலாடுதுறை ஏ.வி.சி., கல்லுாரியின் தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்வேலு, ‘பவணந்தியாரின் தொகைகள்’ எனும் தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றினார்.

முனைவர் கோவலன், ரத்தினமாலா பரிமளம், வேல்முருகன், முத்து அய்யாசாமி, கலைவாணன், கார்த்திகேயன், சிவராமன், தாண்டவமூர்த்தி, அப்துல் பாரூக் வாழ்த்தி பேசினர். பத்மநாபன் நன்றி கூறினார். ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us