sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி

 காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி

 காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி


ADDED : பிப் 27, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்துறை சார்பில், கனியப்பன் - முத்தம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நேற்று நடந்தது.

நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் நடந்த நிகழ்ச்சிக்கு நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.

கனியப்பன் - முத்தம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் பஞ்சாங்கம் நோக்கவுரையாற்றினார்.

பாவேந்தர் பாரதிதாசனின் கலை, இலக்கியக் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் ஆராய்ச்சியாளர் இளங்கோ சிறப்புரை வழங்கினார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா நிறுவியுள்ள பஞ்சு பரிசு வழங்கும் நிகழ்வில் சென்னை கிறித்தவக் கல்லுாரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதிபுத்திரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

நீலமலைத் தொல்லியல் எனும் நுால் சிறந்த நுாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பஞ்சு பரிசுக்கு உரியதாக அறிவிக்கப்பட்டுப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பரிசுத்தொகையைப் பெற்றுக்கொண்டு நூலாசிரியர்கள் சுதாகர் நல்லியப்பன், குமரவேல் இராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் நிறுவனப் பேராசிரியர்கள், பிற கல்லுாரிப் பேராசிரியர்கள், புதுச்சேரி தமிழறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

அறக்கட்டளை உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us