தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அவதுாறு பரப்புவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை

அவதுாறு பரப்புவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை

அவதுாறு பரப்புவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை


ADDED : மார் 09, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தவறான கருத்துகளை பரப்புகின்றனர் என, முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஈரம் பவுண்டேஷன் உறுப்பினர்கள், நண்பர்களோடு இணைந்து தொகுதியில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். அரசியல் மாற்றமே சமூகத்தை மாற்றும் என்ற எண்ணத்தில் காங்.,கில் இணைந்து சமூக பணியோடு அரசியல் பணியை செய்து வருகிறேன்.

என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளேன்.

நான் இணை தயாரிப்பாளராக உள்ள படத்தின் இயக்குநர் அமீர் இயக்கிய மாயவலை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றேன்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தற்போது பரவலாக பேசப்படும் ஜாபர் சாதிக் என்பவரும் கலந்து கொண்டார். அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை. அந்த புகைப்படத்தை பயன்படுத்தி என் அரசியல் வளர்ச்சியை விரும்பாதவர்கள் அவதுாறு செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us