ADDED : அக் 22, 2024 06:10 AM

புதுச்சேரி: காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி சார்பில், சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை காந்தி சிலை திடலில் நடந்தது.
புதுச்சேரி காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் நியாய ஒளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், பெண்கள், மாணவர்களுக்கு பல்வேறு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நியாய ஒளி திட்டத்தின் கீழ் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்தது. ஊர்வலத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய இளந்திரையன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஊர்வலம் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின் ஊர்வலம் மீண்டும் கடற்கரை சாலையில் வந்தடைந்தது.