/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில் துவங்குவதற்கான சட்ட திட்டங்கள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன : நமச்சிவாயம்
/
தொழில் துவங்குவதற்கான சட்ட திட்டங்கள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன : நமச்சிவாயம்
தொழில் துவங்குவதற்கான சட்ட திட்டங்கள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன : நமச்சிவாயம்
தொழில் துவங்குவதற்கான சட்ட திட்டங்கள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன : நமச்சிவாயம்
ADDED : அக் 31, 2025 02:13 AM

புதுச்சேரி:  இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பிப்டிக் நிறுவனம் சார்பில், சர்வதேச விற்போர் மற்றும் வாங்கவோர் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக வாய்ப்புகளை ஆராய 16 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வாங்குபவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
புதுச்சேரியில் இருந்து, கைவினை பொருட்கள், மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துவங்க சட்ட, திட்டங்களை அரசு எளிமையாக்கியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழில் கொள் கையையும், காலச் சூழலுக்கு ஏற்ப, மாற்ற நடவ டிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த சந்திப்பின் மூலம், பல்வேறு ஏற்றுமதி ஒப்பந்தங்களை பெற்றுத்தரும் என்றும், இரு தரப்பினருக்கும் உதவும் என நம்புகிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், தொழில் துறை செயலர் விக்ராந்த்ராஜா, ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் உன்னிகிருஷ்ணன், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், செல்வநாயகி, கோவிந்தராசு, திவ்யா உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தொழில் நுட்ப மற்றும் வணிக வலை யமைப்பு அமர்வுகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று நடை பெறும் நிறைவு அமர்வவில், இரண்டு நாள் நிகழ்வின் முடிவுகள் விவாதிக்கப்படுகின்றன.

