/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி.,விலையை பொருட்களில் ஒட்ட வேண்டியதில்லை சட்டமுறை எடையளவை துறை அறிவிப்பு

ADDED : அக் 15, 2025 11:05 PM
புதுச்சேரி: குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி.,யை பொருட்களில் ஒட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என சட்டமுறை எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வணிகர்கள் தங்களிடம் உள்ள ஜி.எஸ்.டி., வரி குறைப்புக்கு முன்பே தயாரித்த பொருட்களின் லேபிள்களில் குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி.,யை ஒட்டி கடந்த செப்., 22ம் தேதி முதல் விற்க வேண்டும் என, துறை மூலம் தவறுதலாக கூறப்பட்டது.
ஆனால், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் அவ்வாறு திருத்தப்பட்ட எம்.ஆர்.பி.,யை ஒட்டி விற்க வேண்டியதில்லை. ஆனால், செப்., 22ம் தேதிக்கு பின் தயாரிக்கும் பொருட்களில் கண்டிப்பாக திருத்தப்பட்ட விலையை அச்சிட வேண்டும்.
மேலும், தங்களிடம் உள்ள உபயோகிக்காத ரேப்பர் அல்லது பேக்கிங் பொருட்களில் குறைக்கப்பட்ட விலை விவரத்தை முத்திரையிட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டி வரும் மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்தலாம்.
எனவே, வணிகர்கள் குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி.,யை ஒட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், செப்., 22க்கு பின் குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி., விலையில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். பழைய விலையில் விற்பனை செய்யும் வணிகர்கள் மீது சட்டமுறை எடையளவு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.