/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பணிகளை விரைந்து முடிக்க லெனின் வீதி வியாபாரிகள் கோரிக்கை
/
சாலை பணிகளை விரைந்து முடிக்க லெனின் வீதி வியாபாரிகள் கோரிக்கை
சாலை பணிகளை விரைந்து முடிக்க லெனின் வீதி வியாபாரிகள் கோரிக்கை
சாலை பணிகளை விரைந்து முடிக்க லெனின் வீதி வியாபாரிகள் கோரிக்கை
ADDED : பிப் 20, 2024 02:48 AM

புதுச்சேரி : லெனின் வீதியில்சாலை, வாய்க்கால், பாதாள சாக்கடை பணி ஒரே நேரத்தில் நடப்பதால் போக்குவரத்து முழுதுமாக தடைப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குயவர்பாளையம்லெனின் வீதி முழுதும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. சாரம் காமராஜர் சாலையில் துவங்கி திருவள்ளுவர் சாலை வரையிலான 740 மீட்டர் துாரம் கொண்ட இச்சாலை குண்டும் குழியுமாகவும், சாலையோர வாய்க்காலும் சேதமடைந்தது இருந்தது.
பொதுப்பணித்துறை மத்திய கோட்டம் சார்பில் ரூ. 1.36 கோடி மதிப்பில் வாய்க்கால் மற்றும் சாலை பணி கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது. பகுதி பகுதியாக வாய்க்கால் பணி நடந்தது.
பாதாள சாக்கடை மேன்ஹோலுடன் இணைப்பு கொடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று, சாலைப் பணிக்கு முன்னதாக மேன்ஹோல் இணைப்பு கொடுக்கும் பணியும் துவங்கியது.
பாதாள சாக்கடை பணிக்காக சாலை முழுதும் உடைக்கப்பட்டதால், போக்குவரத்து முழுதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக இப்பகுதி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையோர மின் கம்பங்களை அகற்றி அதே இடத்தில் நடுவதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால்பணியில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, சாலை பணியை விரைவுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

