/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கிறிஸ்துவ ஆலயங்களில் சாம்பல் புதனுடன் தவக்காலம் துவக்கம்

ADDED : பிப் 15, 2024 04:57 AM

புதுச்சேரி : கிறிஸ்துவ ஆலயங்களில் நேற்று சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலம் துவங்கியது.
சாம்பல் புதனையொட்டி, ரயில் நிலையம் அருகே தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி, வில்லியனுார் துாய லுார்தன்னை, குருசுக்குப்பம் புனித சவேரியார், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பங்கு தந்தை சாம்பலில் சிலுவையிட்ட ஆசி வழங்கினார். தவக்காலத்தின் புனித வாரம் மார்ச் 24ம் தேதி குருத்து ஞாயிறுடன் துவங்குகிறது. மார்ச் 28ம் தேதி புனித வியாழன், 30ம் தேதி ஈஸ்டர் பண்டிகை பெருவிழா கொண்டாடப்படுகிறது.
புனித சவேரியார் ஆலயத்தின் பங்குதந்தை ஆரோக்கிய சகாய செல்வம் கூறும்போது, '40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்படும். அருளின் காலம், மனமாற்றத்தின் காலம், இரக்கத்தின் காலம் என கிறிஸ்துவர்கள் நோன்பு இருந்தும், ஜெபம் செய்து ஏசுவின் அருளை பெறுவர்' என்றார்.