/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுத்தை நடமாட்டம்? வேப்பூர் அருகே மக்கள் பீதி
/
சிறுத்தை நடமாட்டம்? வேப்பூர் அருகே மக்கள் பீதி
ADDED : நவ 25, 2024 06:17 AM

வேப்பூர் : வேப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் தனது நண்பர்களுடன் பைக்கில் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிறுத்தை போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து கிராம மக்களிடம் கூறினர்.
இதுகுறித்து வனக் காப்பாளர் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, விருத்தாசலம் வன அலுவலர்கள் ரகுவரன், சஞ்சீவி தலைமையிலான குழு நேற்று கிராமம் முழுதும் சோதனை செய்தனர். அதில், கிராம வயல்வெளிகள், வனப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் உள்ளதா என, ஆய்வு செய்தனர்.
சிறுத்தைக்கான அறிகுறிகள் ஏதுமில்லாததால், ஒலி பெருக்கி மூலம் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என, வனத்துறை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனிடையே சிறுத்தை நடமாட்டம் என, தகவல் பரவியதால், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வனத்தையொட்டிய கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.