/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 03, 2024 12:15 AM

புதுச்சேரி, - கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார ஆய்வாளர் முனுசாமி வரவேற்றார். தலைமை மருத்துவ அதிகாரி செல்வி, தொழுநோய் பரவும் விதம், அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். மருத்துவ அதிகாரி, அஜ்மல் அகமது, சமுதாயத்தில் தொழு நோயாளிகளை அரவணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், ஓமியோபதி மருத்துவர் உமா மகேஸ்வரி, பொது சுகாதார செவிலிய அதிகாரி முருகம்மாள், கிராமப்புற சுகாதார துணை செவிலியர்கள் விண்ணரசி, ஜீனத்பேகம், ஆனந்தாய், இந்திரா, ராஜலட்சுமி, விசாலாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார உதவியாளர் சுதாகர் நன்றி கூறினார்.

