மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியில் லாசா வீரர்கள் சாதனை
மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியில் லாசா வீரர்கள் சாதனை
ADDED : ஆக 13, 2026 06:52 PM
புதுச்சேரி: மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியில் லாசா டேபிள் டென்னிஸ் கிளப் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரியில் மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. இப்போட்டியில், ‘லாசா’ டேபிள் டென்னிஸ் கிளப் வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் துருவா முதலிடம் பிடித்ததுடன், 19 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
15 வயது பிரிவில் அருணேஷ் சாம்பியன் பட்டம், 19 மற்றும் 17 வயது பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்தார். 15 வயது பிரிவில் திவ்யேஷ் இரண்டாம் இடம், இளம் வீரர்களுக்கான பிரிவில் மிதுன் கார்த்திக், சாம்பியன் பட்டம் வென்றார். 11 வயது பிரிவில் தஸ்வந்த், முதலிடம், கவுதம் சித்தார்த் இரண்டாம் இடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் 11 வயது பிரிவில் அபிராமி சாம்பியன் பட்டம் வென்று லாசா டேபிள் டென்னிஸ் கிளப்புக்கு பெருமை சேர்த்தார்.
பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்த லாசா வீரர், வீராங்கனைகளுக்கு கிளப் நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
