/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்.ஐ.சி., மண்டல மேலாளர் மயங்கி விழுந்து சாவு
/
எல்.ஐ.சி., மண்டல மேலாளர் மயங்கி விழுந்து சாவு
ADDED : அக் 07, 2024 06:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி எல்.ஐ.சி., மண்டல மேலாளர் மயங்கி விழுந்து இறந்தார்.
மத்தியபிரதேசம், ரிஷிபுரம், ரிஷி ஈஸ்ட் சிட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் மேத்யூ, 57; புதுச்சேரி எல்.ஐ.சி., அலுவலகத்தில் மண்டல மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது, சாரம், பாலாஜி நகர், முதல் தெருவில் வசித்து வந்த சந்தோஷ் மேத்யூ, நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்தார். இதைகண்ட அவரது சமையல்காரர் சுஷாந்த் மறறும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து சந்தோஷ் மேத்யூ இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

