/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 மருந்து கம்பெனிகள் லைசென்ஸ் ரத்து
/
5 மருந்து கம்பெனிகள் லைசென்ஸ் ரத்து
ADDED : டிச 11, 2025 05:09 AM
புதுச்சேரி: போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் ஆறு மருந்து கம்பெனி நிறுவனங்கள் சிக்கின. இதில் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நியூ ஜெர்சி கேர் பார்மா நிறுவனத்தின் லைசென்ஸ் கடந்த 2023ம் ஆண்டே ரத்து செய்யப்பட்டது.
இப்போது ரெய்டில் சிக்கியுள்ள திருபுவனைப்பாளையம் லார்வென் பார்மாசூட்டிக்கல்ஸ், உறுவையாறு ஸ்ரீ அம்மன் பார்மா, தர்மாபுரி மீனாட்சி பார்மா, புதுச்சேரி செட்டி தெருவில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மா, பார்ம் ஹவுஸ் உள்ளிட்ட ஐந்து மருந்து கம்பெனிகளின் லைசென்ஸ்சை கட்டுப்பாட்டு துறை நேற்று ரத்து செய்தது.
இதற்கான உத்தரவினை மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
இதில் லார்வென் பார்மாசூட்டிக்ஸ் மட்டுமே மருந்து உற்பத்தி நிறுவனம்.
மற்ற அனைத்தும் மொத்த விற்பனை மருந்து குடோன்களாக செயல்பட்டவை.

