தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி


UPDATED : ஆக 09, 2026 06:15 PM

ADDED : ஆக 09, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 06:15 PM ADDED : ஆக 09, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி (10ம் தேதி) மாநில பயிற்சி மையம் சார்பில் நடக்கிறது.

பயிற்சியை சுகுனா சுகிர்தாபாய் துவக்கி வைத்தார். பயிற்சியை, உளவியல் துறை வல்லுனர் அனிதா, ஆசிரியர்களுக்கு அளித்தார். இந்த பயிற்சி மூலம்

ஆசிரியர்கள், மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களோடு நேர்மறையான உறவை உருவாக்குதல், பயனுள்ள தகவல் தொடர்பை மேற்கொள்ளுதல், மன அழுத்தம் மற்றும் உணர்வுகளை சரியான முறையில் கையாளுதல் ஆகிய நடைமுறை திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் பத்து முக்கிய வாழ்க்கை திறன்களான சுய விழிப்புணர்வு, விமர்சன சிந்தனை, படைப்பு சிந்தனை, முடிவெடுத்தல், பிரச்னை தீர்த்தல், தனிநபர் உறவு திறன், பயனுள்ள தகவல் தொடர்பு, மன அழுத்தத்தை கையாளுதல் மற்றும் உணர்வுகளை கையாளுதல் ஆகியவை பயிற்சியில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி மூலம் ஆசிரியர்களின் திறன் மேம்படுவதோடு, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான, நேர்மறையான மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் வழிவகுக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில பயிற்சி மையம் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us