தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் இறந்த துக்கம்;தந்தை தற்கொலை

மகன் இறந்த துக்கம்;தந்தை தற்கொலை

மகன் இறந்த துக்கம்;தந்தை தற்கொலை


UPDATED : ஆக 09, 2026 06:18 PM

ADDED : ஆக 09, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 06:18 PM ADDED : ஆக 09, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மகன் இறந்த வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்தவர் தாமோதரன்,80; ஓய்வு பெற்ற ஏ.எப்.டி., ஊழியர். இவரது மகன் சக்திவேல் முருகன்,36; திருமணம் ஆகவில்லை. இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில பணம் வசூல் செய்யும் பணிபுரிந்தார். இவர், சக்கரை, பி.பி., நோய்களால் கடந்த 3 ஆண்டுகளாக அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது, கடந்த 7 ம் தேதி இரவு சக்திவேல் முருகன் வழக்கம் போல் வீட்டில் சாப்பிட்டு துாங்கினார்.

நேற்று முன்தினம் காலையில் பார்த்த போது அவர் எழுந்திருக்கவில்லை. உடனே குடும்பத்தார் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சக்திவேல் முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மனவேதனையில் இருந்த இவரின் தந்தை தாமோதரன், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார் பின்னர் அவரை கடும்பத்தினர் காற்றினர்.

இதற்கு பின் அனர் முதலியார்பேட்டை புதிய அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை ரயில்வே தண்டவாளம் அருகேவுள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us