அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி
ADDED : ஆக 13, 2026 03:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி முகாம் நடந்தது.
மாநில பயிற்சி மையத்தின் சார்பில், நேஷனல் பாபுலேஷன் எஜிகேஷன் திட்டம், என்.சி.ஈ.ஆர்.டி., உடன் இணைந்து நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் சுகுணா சுகிர்தாபாய் துவக்கி வைத்தார். உளவியியல் துறை வல்லுனர் அனிதா, ஆசிரியர்களின் தனிப்ப ட்ட மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், மாணவர்களின் தேவையான வாழ்க்கை திறன்களை வகுப்பறை செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து வழங்குவது குறித்து பயிற்சி அளித்தார். தனிநபர் உறவுத் திறன், பயனுள்ள தகவல் தொடர்பு, மன அழுத்தத்தை கையாளுதல் மற்றும் உணர்வுகளை கையாளுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி மூலம் ஆசிரியர்களின் திறன் மேம்படுவதுடன், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான, நேர்மறையான மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்பாடுகளை மாநில பயிற்சி மையத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
