/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாலையில் எரியும் விளக்குகள்; ஏர்போர்ட் சாலையில் மின் விரயம்
/
மாலையில் எரியும் விளக்குகள்; ஏர்போர்ட் சாலையில் மின் விரயம்
மாலையில் எரியும் விளக்குகள்; ஏர்போர்ட் சாலையில் மின் விரயம்
மாலையில் எரியும் விளக்குகள்; ஏர்போர்ட் சாலையில் மின் விரயம்
ADDED : மார் 16, 2025 07:33 AM
புதுச்சேரி; லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் மாலை 5:30 மணிக்கே தெரு மின் விளக்குகள் எரிவதை, சரி செய்ய வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக, நகர வீதிகளில் பொதுப்பணித்துறை, நகராட்சி, மின்துறை சார்பில் தெரு மின் விளக்குகளை அமைத்து பராமரித்து வருகின்றனர். இதற்காக, பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்காக, ஒவ்வொரு துறையும் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.
லாஸ்பேட்டை, நாவற்குளம், ஏர்போர்ட் சாலை, கல்லுாரி சாலைகளில் வரிசையாக நுாற்றுக்கணக்கான தெரு மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாலை 5:30 மணிக்கே எரிய துவங்கி விடுகிறது.
கோடை காலம் துவங்க உள்ளதால், தற்போது மாலை 6:00 மணிக்கு பிறகே இருள் சூழ்கிறது. ஆனால், மாலை 5:30 மணிக்கே தேவையின்றி மின் விளக்குகள் எரிவதால், பல லட்சம் யூனிட் மின்சாரம் வீணாகிறது. எனவே, லாஸ்பேட்டை பகுதிகளில் மாலை 6:00 மணிக்கு பிறகு, மின் விளக்குகள் எரியும் வகையில், நேரத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.