/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை : 2 லட்சம் அபராதம் வசூல்
/
காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை : 2 லட்சம் அபராதம் வசூல்
காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை : 2 லட்சம் அபராதம் வசூல்
காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை : 2 லட்சம் அபராதம் வசூல்
ADDED : அக் 07, 2025 01:22 AM
புதுச்சேரி, ; புதுச்சேரி காந்தி ஜெயந்தி தினத்தில் தினத்தில் மது விற்றவர்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
காந்தி ஜெயந்தி தினமான கடந்த அக்.2ம் தேதி புதுச்சேரியில் சாராயம், கள்ளு மற்றும் மதுபான கடைகளுக்கு கலால் துறை விடுமுறை அளித்து இருந்தது. இதனை மீறி சிலர் மதுபானம் விற்பதாக கலால் துறைக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் பறக்கும் படையினர் புதுச்சேரியில் ஒன்பது இடங்களில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்றவர்களை பிடித்து இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி மதுபான கடைக்கு விற்கப்பட்டு அதன் தொகை கலால் துறைக்கு செலுத்தப்பட்டது.