/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக போலீசாரின் நடவடிக்கையால் புதுச்சேரியில் சாராயக்கடை ஏலம் 'டல்'
/
தமிழக போலீசாரின் நடவடிக்கையால் புதுச்சேரியில் சாராயக்கடை ஏலம் 'டல்'
தமிழக போலீசாரின் நடவடிக்கையால் புதுச்சேரியில் சாராயக்கடை ஏலம் 'டல்'
தமிழக போலீசாரின் நடவடிக்கையால் புதுச்சேரியில் சாராயக்கடை ஏலம் 'டல்'
ADDED : ஜூன் 17, 2025 08:07 AM

புதுச்சேரி : தமிழக போலீசாரின் நடவடிக்கையால் புதுச்சேரியில் சாராயக் கடைகள் ஏலம் போகாமல் 'டல்' அடித்ததன.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மொத்தம் 85 சாராயக்கடை மற்றும் 72 கள்ளுக் கடைகளுக்கான ஆன்லைன் ஏலம் நேற்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி கலால் துறை அலுவலகத்தில் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மேற்பார்வையில் நடந்தது.
மதியம் 12 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரம் நடந்த ஏலத்தில், புதுச்சேரியில் உள்ள 85 சாராயக் கடைகளில் 8 கடை உரிமம் புதுப்பிக்கப்பட்டது. மீதி உள்ள 78 சாராயக்கடைகளில் ஒன்று கூட ஏலம் போகவில்லை.
காரைக்காலில் உள்ள 25 சாராயக்கடைகளில் 17 கடைகள் மட்டும் உரிமம் புதுப்பிக்கப்பட்டதால், 7 கடைகளுக்கு மட்டுமே ஏலம் நடந்தது. இதில் ஒரு கடை மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது.
மதியம் நடந்த கள்ளுக்கடை ஏலத்தில் புதுச்சேரியில் உள்ள 67 உரிமம் புதுப்பிக்கப்பட்ட 14 கடைகள் போக மீதமுள்ள 52 கடைகளுக்கு நடந்த ஏலத்தில் 7 கடைகள் மட்டும் ரூ.2.10 லட்சத்திற்கு ஏலம் போனது. இதேபோல் காரைக்காலில் உள்ள 26 கள்ளூக்கடைகளில் 6 கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டதால், 20 கடைகளுக்கு ஏலம் நடந்தது. இதில் ஒரு கடை மட்டுமே ஏலம் போனது. நேற்று துவங்கிய சாராயக்கடை ஏலத்தில் சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு வியாபாரிகள் கூறும் காரணம், தமிழகத்தில் நடந்த கள்ள சாராய பலி பிரச்னை காரணமாக, சாராயக் கடத்தலை தடுக்கும் விதத்தில், தமிழக போலீஸார் அடிக்கடி புதுச்சேரியில் உள்ள சாராயக்கடைகளில் சோதனை இடுவது, மற்றும் கடைக்காரர்களை கைது செய்வது போன்றவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்தாண்டு தாறுமாறான விலை ஏற்றத்தில் எடுக்கப்பட்ட விலை காரணமாக நஷ்டம் ஏற்பட்டதால், புதுச்சேரி வியாபாரிகள் சாராயக்கடைகளை ஏலம் எடுப்பதில் ஆர்வம் சற்று குறைந்த நிலையில் இருந்ததாக கூறினர்.
கடந்த ஆண்டு 90 கோடி ரூபாய்க்கு கள் மற்றும் சாராயக் கடைகள் ஏலம் போனது. இந்த ஆண்டு ஏலத்தொகை ஐந்து சதவீதத்தில் துவங்கி 50 சதவீதம் குறையும். அதன் பின்னரே கடைகள் ஏலம் செல்லும் என கலால் துறை அதிகாரிகள் கூறினர்.