ADDED : மே 03, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை அனைத்து வித மதுபானம் கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கலால்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதியும், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதியும் நடந்தன. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளை 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரியில் நாளை அனைத்து மதுபானம், சாராயக் கடைகளை மூட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
