/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்
/
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்
ADDED : மே 03, 2026 05:25 AM
புதுச்சேரி: ஓட்டு எண்ணிக்கையொட்டி, லாஸ்பேட்டை பகுதிகளில் நாளை (4ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை 4ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, தாகூர் கலை அறிவியல் கல்லுாரி மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மையங்கள் அமைந்துள்ள லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மகளிர் பொறியியல் கல்லுாரிக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்களை நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியிலும், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு செல்பவர்கள் வள்ளலார் பள்ளி பின்புறமும், தாகூர் கலை அறிவியல் கல்லுாரிக்கு செல்பவர்கள் கல்லுாரி மைதானத்திலும் நிறுத்த வேண்டும்.
ஜீவா காலனியில் இருந்து விமான நிலைய சாலைக்கு செல்லும் வாகனங்கள் நாவலர் நெடுஞ்செழியன் சந்திப்பில் மாற்றி விடப்படும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வழியாக வரும் வாகனங்கள் ஜெ.டி.எஸ்., சந்திப்பில் ராஜாஜி சாலைக்கு மாற்றிவிடப்படும். விமான நிலைய கல்லுாரி சாலை வழியாக வரும் வாகனங்கள் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் மாற்றி திருப்பிவிடப்படும். அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்த அரசியல் கட்சிகளின் வாகனங்களும் ஓட்டு எண்ணும் மைய வாளகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களுக்கான வாகனங்கள் மேலே குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

