ADDED : மே 03, 2026 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் மையங்களை இந்திய தேர்தல் ஆணையம் மேலிட பார்வையாளர் ரஞ்சன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை நாளை 4ம் தேதி காலை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள மூன்று மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேலிட பார்வையாளர் ரஞ்சன் குமார், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
இம்மையங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன், ஓட்டு எண்ணிக்கை ஒருங்கிணைப்பு அதிகாரி சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
