தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு பட்டியல்

கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு பட்டியல்

கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு பட்டியல்


UPDATED : அக் 31, 2026 12:11 AM

ADDED : அக் 31, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:11 AM ADDED : அக் 31, 2026 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்டாக் நான்– நீட் தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான இரண்டாம் மப்-அப் சுற்று தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் டாஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி ஒதுக்கீட்டு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், உரிய கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு ஆணையுடன் சம்பந்தப்பட்ட கல்லுாரியின் முதல்வரை சந்தித்து கல்லுாரியில் இன்று 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும்.

புதிப்பிக்கப்பட்ட குடியிருப்பு அல்லது சமுதாயச் சான்றிதழ்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இன்று 31ம் தேதி மாலை 3:00 மணிக்குள் தங்கள் டாஷ்போர்டில் உள்ள குறைதீர்ப்பு இணைப்பு மூலம் அவற்றைச் சமர்ப்பித்து ஒதுக்கீட்டு ஆணையைப் பெறலாம்.

கட்டண விவரங்களுக்குச் சென்டாக் வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டைப் பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற வலைத்தளத்தையோ அல்லது 0413-2655570, 0413-2655571 என்ற உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us