/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
/
கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
ADDED : பிப் 26, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், புதுத்துறை பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாடுகள் மற்றும் கோழிகள் கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நாஜிம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கண்காட்சியில் 132 மாடுகள், 86 கோழிகள் இடம்பெற்றன. கண்காட்சியில் சிறந்த கால்நடைகளுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை துறை இணை இயக்குநர் கோபிநாத், கால்நடை மருத்துவர் மருதாச்சலம், உதவியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

