ADDED : பிப் 24, 2026 04:31 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கத்தில் நடந்த, கால்நடை கண்காட்சியில், சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், கால்நடை கண்காட்சி, முருங்கப்பாக்கம், திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை நடந்தது. கால்நடை நலத்துறை இயக்குநர் லதாமங்கேஷ்கர் தலைமை தாங்கினார். இணை இயக்குநர்கள் குமரன், காந்திமதி முன்னிலை வகித்தனார்.
கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட மாடுகள், கோழிகள், வாத்துக்கள் பங்கேற்றன. சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மருத்துவர்கள், கால்நடை நலத்துறை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
