நெல்லித்தொப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
நெல்லித்தொப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
ADDED : மார் 31, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதி ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் பிரசாரம் மேற்கொண்டார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிடும் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று, காராமணிகுப்பம், பவன்கரே வீதி மற்றும் மீன் மார்க்கெட் வீதிகளில் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரித்தார்.
மார்க்கெட் பகுதியில் ஓட்டு சேகரித்தபோது, அப்பகுதி மக்களிடம் குறைகறை கேட்றிந்தார். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றதும், உங்களின் அனைத்து குறைகளையம் உடனே நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது தே.ஜ., கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
