sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 உள்ளாட்சி துறை இயக்குநர் ஆய்வு 

/

 உள்ளாட்சி துறை இயக்குநர் ஆய்வு 

 உள்ளாட்சி துறை இயக்குநர் ஆய்வு 

 உள்ளாட்சி துறை இயக்குநர் ஆய்வு 


ADDED : பிப் 23, 2026 04:25 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுப்புற சூழலின் துாய்மையை செய்யும் வகையில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தினசரி பல பகுதிகளில் சுகாதார ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளாட்சித் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் தலைமையில் துணை இயக்குநர்கள், திடக்கழிவு பணி உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன், திருக்காஞ்சி, கோட்டைமேடு, கரியமாணிக்கம், மதகடிப்பட்டு பகுதிகளில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது துாய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தினமும் காலை 6:00 மணிக்கு முன்பாகவும் மதியம் 2:30 மணிக்கு முன்பாகவும் குப்பை சேகரிக்கும் பணியை துவங்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தவேண்டும் என, உத்தரவிட்டனர்.

மேலும் நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள், பணியில் தொய்வும் ஏற்பட்டால் துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.

கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், புதுச்சேரி கிராமப்பகுதிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவன அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us