தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிேஷகம்

 திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிேஷகம்

 திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிேஷகம்


ADDED : பிப் 23, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: திருக்காஞ்சியில் சதாசிவமூர்த்திகோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

திருக்காஞ்சி, கெங்கவராக நதீஸ்வரர் கோவில், சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 27 நட்சத்திர மூர்த்தங்கள், 12 ராசி மூர்த்தங்களோடுமனோன்மணி அம்பிகா சமேத சதாசிவமூர்த்தி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில்கும்பாபி ேஷக விழா கடந்த 16ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 20ம் தேதி ஆச்சார்ய வர்ணம், யாகசாலை அலங்காரம் அஷ்டபந்தனம் சாற்றுதல், அன்று மாலை 6:30 மணிக்கு மேல் முதற்கால யாக பூஜை, 21ம் தேதி காலைஇரண்டாம் கால யாக பூஜை, சங்கராபரணி நதியில் விேஷா சந்தி கால பூஜைகள் நடந்தது.

மாலை மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது.

நேற்று (22ம் தேதி) அதிகாலை 4:30 மணியளவில் நான்காம் காலயாக பூஜைகள், காலை 6:30 மணியளவில் பரிவாக யாகசாலை பூர்ணாஹூதி, கலசங்கங்கள், கடம் புறப்பாடு நடந்தது. காலை 8:10 மணியளவில் விமான கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து நட்சத்திர ராசி மற்றும் நவகிரஹங்களுக்கு மகா கும்பாபிேஷகம், காலை 9:15 மணியளவில் சதாசிவ மூர்த்திக்கு மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

விழாவில், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணியளவில் அபிேஷகம், தீபாராதனை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us