/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பை அகற்றாததை கண்டித்து உள்ளாட்சி அலுவலகம் முற்றுகை
/
குப்பை அகற்றாததை கண்டித்து உள்ளாட்சி அலுவலகம் முற்றுகை
குப்பை அகற்றாததை கண்டித்து உள்ளாட்சி அலுவலகம் முற்றுகை
குப்பை அகற்றாததை கண்டித்து உள்ளாட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 25, 2025 06:20 AM

புதுச்சேரி: நகரப்பகுதியில் குப்பை அகற்றாததை கண்டித்து, உள்ளாட்சித்துறை இயக்குநர் அலுவலகத்தை பொதுமக்களுடன் எம்.எல்.ஏ., முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி நகர பகுதியில் தீபாவளி முதல், சரிவர குப்பை அகற்றப்படவில்லை. குறிப்பாக, உருளையன்பேட்டை தொகுதி முழுதும் குப்பை தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., பொதுமக்களுடன் சென்று, உள்ளாட்சித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, குப்பையை உடனடியாக வார வலியுறுத்தி கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, துணை இயக்குநர் சவுந்தரராஜன் குப்பையை அகற்ற உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று எம்.எல்.ஏ., மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.