தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாண்பேப் அலுவலகத்திற்கு பூட்டு நெசவாளர்கள் போராட்டம்

 பாண்பேப் அலுவலகத்திற்கு பூட்டு நெசவாளர்கள் போராட்டம்

 பாண்பேப் அலுவலகத்திற்கு பூட்டு நெசவாளர்கள் போராட்டம்


ADDED : மார் 10, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி ஊக்கத்தொகை வழங்ககோரி நெசவாளர்கள் பாண்பேப் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பாண்பேப் நிறுவனத்தில் தற்போது 130 நெசவாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், மூன்று கைத்தறிகள் மட்டுமே இயங்கி வருவதால், நெசவாளர்கள் வேலையின்றி வறுமையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 சதவீத ஊக்கத்தொகை காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். ஆனால், 2 மாதங்களுக்கு மேலாகியும் நெசவாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.

இதனை கண்டித்து உடனே ஊக்கத்தொகை வழங்க கோரி முத்தியால்பேட்டையில் உள்ள பாண்பேப் தலைமை அலுவல கத்தை நெசவாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்திற்கு பூட்டு போட்டு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். தலைவர் ராமலிங்கம், செயலாளர் வேணு கஜேந்திரன், பொருளாளர் பாஸ்கர், இணை செயலாளர்கள் சுப்ரமணியன், ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் நாகலட்சுமி, வடிவு, லுார்துசாமி, ராதா, சிவராமன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us