தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா கொள்கை

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா கொள்கை

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா கொள்கை


ADDED : அக் 11, 2024 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி மாநில பொருளாதார வளர்ச்சிக்கு லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் ஒருங்கிணைந்த தளவாட உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது மிக முக்கியம். மல்டிபிள் லாஜிஸ்டிக்ஸ் பார்க் என்படும் பலவகை தளவாடங்கள் ஒருங்கிணைந்த பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், ஏற்றுமதியும், இறக்குமதியும் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.

எனவே, புதுச்சேரி மாநில பொருளாதார வளர்ச்சி முன்னெடுப்பிற்கான புதுச்சேரி ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பு, பல வகை லாஜிஸ்டிக்ஸ் பார்க், வார் அவுஸ் கொள்கையை மாநில அரசு தொழில் துறை மூலம்வெளியிட்டுள்ளது.

புதிய லாஜிஸ்டிக்ஸ் கொள்கையின்படி கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், சரக்கு டெர்மினல்கள், கஸ்டம் வசதிகள், டிரக் டெர்மினல்கள், வாகன ஓட்டிகளுக்கான தங்குமிடம் மற்றும் போர்டிங் வசதிகள் போன்ற பல வசதிகள் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு போக்குவரத்து முறைகளை எளிதாகத் தேர்வு செய்ய முடியும்.

ஊக்கத் தொகை திட்டம்


புதுச்சேரியில் லாஜிஸ்டிக்ஸ் உட்கட்டமைப்பினை ஏற்படுத்த முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் பார்க், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க், வார் அவுஸ், ஜெட்டீஸ், உள்நாட்டு கண்டெய்னர் முனையம், ஏர் பிரைட் ஸ்டேஷன், டெர்மினல், ஏர் கார்கோ காம்ளக்ஸ், டிராக் முனையம் போன்ற உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்தால் முதலீட்டில் 15 சதவீதம் அதாவது 50 லட்சத்திற்கு மிகாமல் ஊக்கத் தொகை கிடைக்கும்.

ரிசர்வ் வங்கியின் அட்டவணைப்படுத்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால் 25 சதவீத வட்டி மானியம் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கு மிகாமல், ஐந்தாண்டு வரை பெற முடியும். சப்சிடிக்கான குவாலிட்டி சர்ட்டிபிகேட் பெற்றிருந்தால் 50 சதவீதம் அதாவது ஒவ்வொரு சான்றிதழ்க்கும் 2 லட்சம் வரை பெற முடியும்.

காப்புரிமை செலவு


அறிவு சார் சொத்துரிமைக்கான 50 சதவீதம் செலவினை புதுச்சேரி ஏற்க திட்டமிட்டுள்ளது. இதன்படி உள்நாட்டு காப்புரிமைக்கு 2 லட்சமும், வெளிநாடு காப்புரிமைக்காக 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை பெறலாம்.

பயிற்சி திட்டம்:


இதேபோல், லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தாலும் ஊக்கத் தொகை திட்டம் செயல்பட உள்ளது. 50 மணி பயிற்சிக்கு ஒரு தொழிலாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் விதம் 20 பேருக்கு ஊக்கத் தொகை பெறலாம். 100 மணி நேர பயிற்சிக்கு ஒரு தொழிலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் 15 பேருக்கு ஊக்கத் தொகை பெறலாம். 200 மணி நேர பயிற்சி என்றால் ஒரு தொழிலாருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 10 பேர் வரை ஊக்கத் தொகை கிடைக்கும்.

கொள்முதல் லாஜிஸ்டிக்ஸ் உட்டமைப்பினை ஏற்படுத்தும்போது கட்டிங்ெஹஜ் தொழில்நுட்ப கருவிகள் கொள்முதலுக்கு 50 சதவீதம் செலவினை அதவாது 10 லட்சத்திற்கு மிகாமல் திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us