தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு


ADDED : அக் 23, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: செப்டிக் டேங்க் லாரி டிரைவர், கிளீனரை தாக்கி மொபைல் போன், பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால், தைக்கால் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன், 42; செப்டிக் டேங்க் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், கிளீனர் குமார், 60, என்பவருடன் போத்திரமங்கலம் சுப்ரமணி என்பவரது வீட்டிற்கு கழிவுநீர் அகற்ற சென்றார்.

அப்போது, முத்துக்குமரன், கிளீனர் குமார் இருவரும் அதே பகுதியில் மது அருந்துவதற்கு லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளனர். அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், இருவரையும் தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த 2 மொபைல் போன் மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

முத்துக்குமரன் கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us