/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாரி டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை
/
லாரி டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை
ADDED : டிச 05, 2024 07:02 AM
புதுச்சேரி; துத்திப்பட்டு கம்பெனிக்கு லோடு இறக்க வந்த லாரி டிரைவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார், பாதிரிக்குப்பம், சுதாகர் நகரைச் சேர்ந்தவர் விஜயக்குமார்,35; இவரது மனைவி நித்யபிரியா,30; இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளார்.
லாரி டிரைவரான விஜயக்குமார் கடந்த 29ம் தேதி புதுச்சேரி துத்திப்பட்டு தனியார் கிளாஸ் கம்பெனியில் லோடு இறக்க வந்தார். நேற்று முன்தினம் காலை மனைவியை தொடர்பு கொண்ட விஜயக்குமார், தனக்கு உடல்நிலை சரியில்லை லோடு இறக்கியவுடன் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளாார்.
பின்னரர் லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு, உடல்நிலை சரியில்லை. வேறு டிரைவர் மூலம் லாரியை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
லாரி உரிமையாளர் வேறு டிரைவருடன் தனியார் கிளாஸ் கம்பெனி எதிரில் நிறுத்தியிருந்த லாரியில் சென்று பார்த்தபோது, டிரைவர் சீட்டில், விஜயக்குமார் மயங்கிக்கிடந்தார். உடன் அவரை, கதிர்காமம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.
சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.