/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலில் நஷ்டம்; வியாபாரி தற்கொலை
/
தொழிலில் நஷ்டம்; வியாபாரி தற்கொலை
ADDED : ஜன 15, 2024 06:50 AM
அரியாங்குப்பம் : தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனை கொடுக்க முடியததால் மனமுடைந்த வியாபாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டிணம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கணேஷ், 40; இவர் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி.
வீட்டின் கீழ் தளத்தில் டிபார்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்தார். கடைக்கு முதலீடு செய்ய கடன் வாங்கியிருந்தார். கடையில் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் ஏட்டு விநாயகமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.