/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பங்கு சந்தையில் பணம் இழப்பு வியாபாரி துாக்குபோட்டு தற்கொலை
/
பங்கு சந்தையில் பணம் இழப்பு வியாபாரி துாக்குபோட்டு தற்கொலை
பங்கு சந்தையில் பணம் இழப்பு வியாபாரி துாக்குபோட்டு தற்கொலை
பங்கு சந்தையில் பணம் இழப்பு வியாபாரி துாக்குபோட்டு தற்கொலை
ADDED : மார் 18, 2024 05:37 AM
புதுச்சேரி : ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்த வியாபாரி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி சாரம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சிவபிரகாசம், 47; இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரு மகள்கள். ரெயின்போ நகர், 7 வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சிவபிரகாசம் இளங்கோ நகரில் காஸ்ட் பிரைஸ் ஷாப் நடத்தி கொண்டு, பங்கு சந்தையிலும் பணம் முதலீடு செய்யும் தொழிலில் ஈடுபட்டார்.
சமீபத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் நஷ்டமடைந்தது. அதனால் மன உளச்சல் அடைந்த சிவபிரகாசம், குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அரசு மருத்துவமனையில் காண்பித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இளங்கோ நகர் கடைக்கு வந்த சிவபிரகாசம், கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஸ்டோருக்கு சென்றார்.
அதன்பிறகு வெகுநேரமாகியும் சிவபிரகாசம் வீடு திரும்பாததால், சுமதி போன் செய்து விபரம் கேட்டார். பைக் டயர் பஞ்சராகி விட்டது. வீட்டிற்கு வருகிறேன் என கூறினார்.
வெளியில் சென்றிருந்த சுமதி வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் முன்பு சிவபிரகாசம் பைக் நின்றிருந்தது. வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சிவபிரகாசம் மின் விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

