/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காணாமல் போன போன் மீட்பு உரியவரிடம் ஒப்படைப்பு
/
காணாமல் போன போன் மீட்பு உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : மே 17, 2025 12:18 AM

புதுச்சேரி: காணமால் போன மொபைல் போனை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
உப்பளம் பகுதியை சேர்ந்தவர் ஜேவின். இவர், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, தனது பைக்கில் வைத்துவிட்டு, ஞானபாக மறதியாக வீட்டின் உள்ளே சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மொபைல் போனை காணவில்லை. இதுகுறித்து, ஜேவின் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் காணமால் போன மொபைல் போனை ட்ராக்கிங் செய்தபோது, லாஸ்பேட்டை பகுதியில் உள்ளதாக காட்டியுள்ளது.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் வைத்தியநாதன், தேவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மொபைல் போன் வைத்திருந்த நபரை பிடித்து, அவரிடம் இருந்து மொபைல் போனை மீட்டனர்.
விசாரணையில், வேறு ஒருவர் குறைந்த விலைக்கு அந்த மொபைல் போன்னை விற்றுவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் இனி குறைந்த விலைக்கு மொபைல் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தால், அதனை வாங்க கூடாது என, எச்சரித்து அனுப்பினர்.
மொபைல் போனை மீட்ட போலீசார் ஜேவினை சைபர் கிரைம் போலீஸ் நிலையம் வரவழைத்து, ஒப்படைத்தனர்.