ADDED : ஆக 24, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது மக்கள் தவற விட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டு, பொது மக்களிடம் புகார்களை கேட்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மேலும், பொது மக்கள் தவற விட்ட 15மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் மதிப்பு 3 லட்ச ரூபாயாகும்.
நிகழ்ச்சியில், இணைய வழி மோசடியினர் பயன்படுத்தும் யுக்திகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.