தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது


ADDED : மே 31, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை,: திருபுவனை அருகே 3ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை அடுத்த கே.ஆண்டியார்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 3ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து திருபுனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் கே.ஆண்டியார்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அவர் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜி (எ) பெரியண்ணசாமி 35; என்பது தெரியவந்தது. அவரை போலீசார், கைது செய்து, அவரிடம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 7 ஆயிரத்து 549 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், விசாரணையில், லாட்டரி வியாபாரியான, ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவர் மூலம் லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

பெரியண்ணசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான வியாபாரி குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us