/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறைந்த வட்டியில் கடன் ரூ.71 ஆயிரம் மோசடி
/
குறைந்த வட்டியில் கடன் ரூ.71 ஆயிரம் மோசடி
ADDED : ஜூலை 22, 2025 07:55 AM
புதுச்சேரி : குறைந்த வட்டியில் 14 லட்சம் லோன் தருவதாக கூறி ரூ.71 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார், தேவநாதன் நகரை சேர்ந்தவர் சங்கர், 49. இவரை கடந்த ஏப்ரல் 3ம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர், குறைந்த வட்டியில் 14 லட்சம் ரூபாய் வரை லோன் தரு வதாக தெரிவித்துள்ளார். இதைநம்பி லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்துபடி கூறியுள்ளனர். இதையடுத்து, பல்வேறு தவணைகளாக 71 ஆயிரத்து 500 ரூபாய் மர்மநபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
அதன்பின், லோன் தொடர்பாக எந்தவித தகவலும் வரவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

