/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை... திறக்கப்படும்; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி
/
எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை... திறக்கப்படும்; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி
எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை... திறக்கப்படும்; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி
எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை... திறக்கப்படும்; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி
ADDED : மார் 21, 2025 05:28 AM

புதுச்சேரி: மாநிலத்தில் ஒரு சர்க்கரை ஆலை கூட இல்லாத சூழ்நிலையில் வெளி மாநிலங்களுக்கு கரும்புகளை விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். கரும்பு விவசாயிகளுக்கு நம்பிக்கை விதைக்கும் விதத்தில் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி இனிப்பாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நெல்லுக்கு அடுத்தப்படி யாக கரும்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த கரும்புகள் அனைத்தும் கடந்த காலங்களில் அரியூர் நியூ ஒரிசான்' சர்க்கரை ஆலை, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என இரண்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. கரும்பு அரவையும் நடந்தது.
நிர்வாக சிக்கலில் தவித்த தனியாரின் அரியூர் நியூ ஒரிசான்' சர்க்கரை ஆலை, கடைசியாக, 2016ம் ஆண்டு 30 டன் அளவிற்கு கரும்பு அரவை மட்டுமே நடந்ததால் அனைத்து லைசென்ஸ்களையும் 'சரண்டர்' செய்து, ஆலை மூடப்பட்டது.
அடுத்து நல்ல நிலையில் இயங்கி வந்த புதுச்சேரி அரசின் லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் கடந்த 2017ம் ஆண்டு 80 ஆயிரம் கருப்புகள் அரவை பருவத்திற்கு காத்திருந்தபோதும் திடீரென இழுத்து மூடப்பட்டது.
மாநிலத்தில் தற்போது சர்க்கரை ஆலை இல்லாததால், புதுச்சேரி கரும்பு விவசாயிகள், தமிழகத்தின் மதுராந்தகம், முண்டியப்பாக்ககம் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பி வருகின்றனர்.
மாநிலத்தில் ஒரு சர்க்கரை ஆலை இல்லாத சூழ்நிலையில் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை குறித்து எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சட்ட சபையில் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சி தலைவர் சிவா, அசோக்பாபு (பா.ஜ.,): லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடியதால், விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தனியார் பங்களிப்புடன் மாற்று வழியில் மீண்டும் ஆலையை திறந்து, செயல்படுத்த அரசு அறிவிப்பின் நிலை என்ன. இந்த ஆண்டு அரசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்குமா?
முதல்வர் ரங்கசாமி: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆலோசகராக நியமிக்கப்பட்டு ஆலையை மீண்டும் நடத்த அறிக்கை பெறப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த ஆண்டே திறக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர்: நலிவடைந்த பல ஆலைகள் மூடப்பட்டுள்ளது. மத்திய அரசு சர்க்கரை ஆலையை திறக்கவும், எத்தனால் தயாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இங்கு எரி சாராயம் தயாரிக்கலாம். நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருந்த ஆலையை கவனத்தில் எடுத்து மீண்டும் திறக்க வேண்டும்.
முதல்வர்: அந்த ஆலையை பற்றி முழுமை யாக எனக்கு தெரியும். நல்ல நிலையில் தான் ஓடியது, லாபமும் தந்தது.
அங்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களை காட்டிலும் சம்பளம் அதிகம். சம்பளத்தை இப்போது வரை கொடுத்து வருகிறோம். எந்த முடிவையும் எடுக்க விடாததால் தான் ஆலையை திறக்க முடியவில்லை.
சில காரணங்களால் நஷ்டமும் ஏற்பட்டது.
எதிர்கட்சித் தலைவர்: அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் தரவில்லை. ஆலையை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் தான் சம்பளம் தருகிறீர்கள். கரும்பு வழங்கியவர்களுக்கே இன்றுவரை பணம் வழங்கவில்லை.
முதல்வர்: கடந்த ஆண்டு ரூ.37 கோடி ஆலை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கியுள்ளோம். அனைவருக்கும் தான் சம்பளம் தருகிறோம். ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகள்தான் அங்கு வேலை பார்க்கின்றனர். அவர்கள் எந்த முடிவும் எடுக்க விடுவதில்லை.
இப்போது ஆலை மூடும் நிலைக்கு வந்த பிறகு, ஆலையை திறந்து, எத்தனால் தயாரிக்க ஒப்புதல் தருகிறார்கள். இதுதொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுத்துள்ளோம். விரைவில் தனியார் பங்களிப்போடு ஆலையை திறந்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக வாக்குறுதியும் அளித்துள்ளோம். தனியார் நிறுவனத்தினர் ஆலையை பார்வையிட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலை இந்த ஆண்டே திறக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.