தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆடம்பர தேர்பவனி 

ஆடம்பர தேர்பவனி 

ஆடம்பர தேர்பவனி 


ADDED : ஆக 15, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது.

நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி, காலை, மாலை சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நடந்து வருகிறது.

இந்நிலையில் பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு நடந்த திருவிழா திருப்பலியில் புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்துகொண்டார். மாலை 6:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது.

நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைத்தார். இதில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பங்கு தந்தை சூசைராஜ் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us