UPDATED : நவ 24, 2026 11:34 PM
ADDED : நவ 24, 2026 11:34 PM
புதுச்சேரி: புதுச்சேரி, இளங்கோ நகரைச் சேர்ந்தவர் சேகர், 66; ஓய்வுபெற்ற ஏ.எப்.டி., மில் சூப்பர்வைசர். இவரை மொபைலில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முகவர் எனக் கூறி, ஓய்வூதியம் தொடர்பாக பேசியுள்ளார்.
இதையடுத்து, மொபைல் செயலி ஒன்றை சேகரின் மொபைல் எண்ணிற்கு மர்மநபர் அனுப்பியுள்ளார். அதனை நம்பிய சேகர், மர்மநபர் அனுப்பிய மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, வங்கி விபரங்களை பதிவிட்டள்ளார்.
பின், சிறிது நேரத்தில் சேகரின் வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 6 ஆயிரத்து 690 எடுக்கப்பட்டது.
இதேபோல், உருளையன்பேட்டை, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த ஆனந்தி, என்பவர் பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து, சுடிதார் ஆர்டர் செய்து, சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 117 இழந்தார்.
இந்த மோசடி குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
