தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


UPDATED : நவ 24, 2026 11:34 PM

ADDED : நவ 24, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:34 PM ADDED : நவ 24, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தோழியுடன் ஸ்கூட்டரில் சென்றபோது விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த பியூட்டி பார்லர் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானுார், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் உஷா, 44; பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தார். கடந்த 22ம் தேதி காலை கடற்கரைக்குச் சென்றுவிட்டு, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த தோழி பிரியதர்ஷினி என்பவருடன் ஸ்கூட்டரில் (பி.ஒய் 01 டிபி 4772) வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

புதுச்சேரி, செட்டி வீதி– சின்ன சுப்பராய பிள்ளை வீதி சந்திப்பில் வந்தபோது, திடீரென பிரேக் பிடித்ததில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல்சிகிச்சைக்காக கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உஷா நேற்று இறந்தார்.

விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us