/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்தியப் பிரதேச ஆசிரியர்கள் ஆரோவில் முகாமில் பங்கேற்பு
/
மத்தியப் பிரதேச ஆசிரியர்கள் ஆரோவில் முகாமில் பங்கேற்பு
மத்தியப் பிரதேச ஆசிரியர்கள் ஆரோவில் முகாமில் பங்கேற்பு
மத்தியப் பிரதேச ஆசிரியர்கள் ஆரோவில் முகாமில் பங்கேற்பு
ADDED : ஏப் 10, 2025 01:38 AM

வானூர்: பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேச அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 90 ஆசிரியர்கள், ஆரோவில் நகரில் நடக்கும் 5 நாள் முகாமில் பங்கேற்று உள்ளனர்.
மத்திய பிரதேச ஆசிரியர்கள் 30 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 5 நாட்கள் முகாமில் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமின் நோக்கம், ஆரோவில் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள முழுமையான கல்வி முறையை நுண்ணறிவுடன் கற்றுக்கொள்வது. திவ்யா என்பவரின் அறிமுக நிகழ்ச்சியுடன் முகாம் துவங்கியது.
இதில் ஆசிரியர்களுக்கு ஆரோவில் நகரத்தின் அடித்தள தத்துவம் மற்றும் மாத்திர் மந்திர் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. டாக்டர் சஞ்சீவ் ரங்கநாதன், ஆரோவில் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படும் முழுமையான கல்வி முறை குறித்து எடுத்துரைத்தார்.
முகாமில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், மத்தியப் பிரதேச கல்வித்துறை, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது முகாமில் பங்கேற்கும் ஆசிரியர்கள், ஆரோவில் கல்வி முறை மத்தியபிரதேசத்தில் பரப்பும் தூதர்களாக செயல்படவுள்ளனர்.

