/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 5 அதிகாரிகளை கைது செய்ய 'வாரண்ட்' கோர்ட் அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட் அதிரடி
/
புதுச்சேரியில் 5 அதிகாரிகளை கைது செய்ய 'வாரண்ட்' கோர்ட் அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட் அதிரடி
புதுச்சேரியில் 5 அதிகாரிகளை கைது செய்ய 'வாரண்ட்' கோர்ட் அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட் அதிரடி
புதுச்சேரியில் 5 அதிகாரிகளை கைது செய்ய 'வாரண்ட்' கோர்ட் அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட் அதிரடி
ADDED : ஜன 10, 2025 05:42 AM
புதுச்சேரி: ஊர்க்காவல் படை வீரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐந்து புதுச்சேரி அதிகாரிகளை பெயிலபிள் வாரண்ட்டில் கைது செய்து, ஆஜர்படுத்த மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஊர்க்காவல் படை தேர்வு கணிதம், பொது அறிவியல்-25 மதிப்பெண், வரலாறு, புவியியல்-25, பொது அறிவு -50 மதிப்பெண் என்ற அடிப்படையில் நடக்கும் என கடந்த 27.10.2023ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிப்பாணையில் உள்ளபடி பாட முறைகளில் இருந்து கேள்வித்தாள்கள் கேட்கப்படவில்லை. மாறாக வினாத்தாளில் 86-வது கேள்வி முதல் 100 வரை ஆங்கில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டது.
ஏமாற்றம் அடைந்த 54 தேர்வாளர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் வழிகாட்டுபடி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், கோர்ட்டினை அணுகிய 54 பேர்களில் 37 பேருக்கு ஊர்க்காவல் படை வீரர் பணி வழங்க 25.09.2024ல் உத்தரவிட்டார். ஆனால் கோர்ட் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் கோர்ட் தீர்ப்பை அவமதித்ததை மதுரை ஐகோர்ட்டில் தற்போதுள்ள நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தானாக முன் வந்து எடுத்து, கடந்த 8ம் தேதி புதுச்சேரி அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் புதுச்சேரி அதிகாரிகள் ஆஜராகவில்லை. அதையடுத்த நேற்று 9ம் தேதி புதுச்சேரி அதிகாரிகளை ஆஜராக சொல்லி தள்ளி வைத்தார். ஆனால் நேற்றும் புதுச்சேரி அதிகாரிகள் ஆஜராகவில்லை.
அதையடுத்து வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், புதுச்சேரி மாநில நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை அரசு செயலர் பங்கஜ் குமார் ஜா, ஐ.ஜி., அஜித்குமார் சிங்களா, சீனியர் எஸ்.பி., அனிதா ராய், எஸ்.பி., சுபம்கோஷ், சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை உள்ளிட்டோரை கைது செய்து வரும் 24ம் தேதி மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மதியம் 2.15க்கு ஆஜர்படுத்த புதுச்சேரி டி.ஜி.பி.,க்கு அதிரடியாக பெயிலபிள் வாரண்ட் பிறப்பித்தார்.
இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

