/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொன்னியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
/
பொன்னியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 02, 2025 05:00 AM
புதுச்சேரி : பாக்கமுடையான்பட்டு பொன்னியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, ஏர்போர்ட் சாலையில் பொன்னியம்மன், செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் புதிதாக 5 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் இன்று (2ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, கடந்த 27ம் தேதி காலை 9:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வாக, இன்று (2ம் தேதி) காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை ஆரம்பம், காலை 10:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 10:20 மணிக்கு விமான, ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், 11:00 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, செயற்பாட்டுக் குழு, தனி அதிகாரி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.