/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்
/
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 13, 2025 04:02 AM
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தி மற்றும் 18 சித்தர்களுக்கு வரும் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9 அடி உயர தட்சணாமூர்த்தி மற்றும் 6 அடி உயரமுள்ள 18 சித்தர்கள், 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடம் மகா கும்பாபிேஷகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
இதற்கான பூஜை நாளை (14ம் தேதி) காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரக ேஷாமம், மகாலட்சுமி ேஹாமம், கோ பூஜை, ரிஷப பூஜை, அஸ்வ பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்துசங்கிரகனம், கும்ப அலங்காரம், பிரவேசபலி, அங்குரார்பணம், ரக் ஷாபந்தனத்தை தொடர்ந்து முதல்கால யாக பூஜை நடக்கிறது.
15ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது. 16ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகிறது. தொடர்ந்து 10:00 மணிக்கு தட்சணாமூர்த்தி, 10:18 மணிக்கு 18 சித்தர்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு அனைத்து குருமார்களுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது.