sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சனீஸ்வர பகவான் கோவிலில் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்

/

சனீஸ்வர பகவான் கோவிலில் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்

சனீஸ்வர பகவான் கோவிலில் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்

சனீஸ்வர பகவான் கோவிலில் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம்


ADDED : ஏப் 10, 2025 04:12 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவில் தக் ஷிணாமூர்த்தி, 18 சித்தர்களுக்கு மகா கும்பாபிேஷகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9 அடி உயர தக் ஷிணாமூர்த்தி உடன் 6 அடி உயர 18 சித்தர்கள் மற்றும் 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடம் மகா கும்பாபிேஷகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, வரும் 14ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, ரிஷப பூஜை மற்றும் அஸ்வ பூஜை, மாலை 5:30 மணிக்கு வாஸ்த்து சாந்தி, மிருத்து சங்கிரகனம், கும்பா அலங்காரம், ரக் ஷாபந்தனம், முதல் காலயாக பூஜை நடக்கிறது.

வரும் 15ம் தேதி காலை 9:00 மணிக்கு அஷ்டலஷ்மி பூஜை, தன பூஜை, அஸ்டாதச கிரியை புதிய சுவாமிகளுக்கு கண் திறப்பு விழா, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, மகா தீபாரதனை நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு தக் ஷிணாமூர்த்திக்கு கும்பாபிேஷகம், காலை 10:18 மணிக்கு 18 சித்தர்களுக்கு மகா கும்பாபிேஷகம், 10:30 மணிக்கு அனைத்து குருமார்களுக்கும் மகா தீப ஆராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us